
அமெரிக்கா “மிக விரைவில்” ஈரானை விட்டு வெளியேறும் – டொனால்ட் ட்ரம்ப்
ஈரான் மீதான இராணுவ நடவடிக்கைகள் மிக விரைவில் முடிவுக்கு வரும் என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் அறிவிப்பைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் இன்று புதன்கிழமை வீழ்ச்சியடைந்துள்ளன.
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை 3 சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைந்து, ஒரு பீப்பாய் 100 டொலருக்கும் சற்று அதிகமான நிலைக்கு வந்துள்ளது.
ஓவல் அலுவலகத்தில் (Oval Office) உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்கா “மிக விரைவில்” ஈரானை விட்டு வெளியேறும் என்றும், இராணுவ நடவடிக்கைகள் இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் முடிவுக்கு வரக்கூடும் என்றும் தெரிவித்தார்.
இந்த சாதகமான அறிவிப்பே விலை வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
விலை குறைந்த போதிலும், போர் தொடங்குவதற்கு முந்தைய காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் விலை இன்னும் 39 சதவீதம் உயர்வாகவே காணப்படுகிறது.
ஈரான் போர் தொடங்கிய போது, உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்திற்கான மிக முக்கியமான பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியது.
இதனால் ஏற்பட்ட விநியோகத் தட்டுப்பாடு காரணமாகவே எண்ணெய் விலைகள் கடந்த மாதங்களில் உச்சத்தைத் தொட்டிருந்தன.
தற்போது போர் முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதால், விநியோகச் சங்கிலி மீண்டும் சீராகும் என முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
