அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இடையிலான உச்சி மாநாட்டில், சீனாவிடமிருந்து போயிங் விமானங்களுக்கான புதிய பெரிய கொள்வனவு ஒப்பந்தம் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு பதிலாக, கடந்த மே மாதம் சீனா உறுதியளித்த 200 போயிங் விமானங்களுக்கான ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் போயிங் நிறுவனம் கவனம் செலுத்தி வருவதாக பேச்சுவார்த்தைகள் தொடர்பில் அறிந்த இரு தரப்பினர் தெரிவித்துள்ளனர். முன்னதாக, நூற்றுக்கணக்கான கூடுதல் விமானங்களுக்கான புதிய ஒப்பந்தம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
சீன விமானச் சந்தையில் போயிங் நிறுவனம் 2017ஆம் ஆண்டுக்குப் பின்னர் பெரிய அளவிலான புதிய ஆர்டர்களைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளது. இதனிடையே, அமெரிக்கா–சீனா வர்த்தக போர் நிறுத்தத்தை நீட்டித்தல், செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு, தைவானுக்கான ஆயுத விற்பனை மற்றும் அரிய கனிமங்கள் உள்ளிட்ட விவகாரங்கள் இந்த உச்சி மாநாட்டில் முக்கிய கவனம் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.










