அமெரிக்காவில் புழுதி புயல்: 6 பேர் பலி
அமெரிக்காவின் சிகாகோவில் இருந்து 300 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பார்மர்ஸ்வில்லி நகருக்கு இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள இன்டர்ஸ்டேட் 55 நெடுஞ்சாலையில் வீசிய புழுதி புயலில் சிக்கி 6 பேர் பலியாகியுள்ளதாக அந் நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப் பகுதியில் வீசிய புழுதி புயல் காரணமாக 3 கிலோ மீற்றர் தூரத்துக்கு கார், லொரி, பேருந்து என 100 க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிக் கொண்டுள்ளன.இவ் விபத்தின் போது இரண்டு லொரிகளில் தீப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் போது 6 பேர் பலியாகியுள்ளனர். 30 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்