அமெரிக்காவில் பாடசாலையில் துப்பாக்கிச்சூடு
அமெரிக்காவில் மின்னியபொலிஸ் (Minneapolis) நகரில் உள்ள கத்தோலிக்க பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் சிறுவர்கள் இருவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் 17 பேர் காயமடைந்துள்ளனர் .காயமடைந்தவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இதேநேரம் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் தம்மைத்தாமே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.அவருக்குக் குறிப்பிடத்தக்க குற்றவியல் பின்னணி எதுவும் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டமைக்கான காரணம் இது வரையில் வெளியாகவில்லை.
இந்நிலையில், துப்பாக்கிச்சூடு உள்நாட்டுப் பயங்கரவாதச் செயலா அல்லது கத்தோலிக்கர்களுக்கு எதிரான வெறுப்பு குற்றமா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
