
அமெரிக்காவில் டிக் டொக் தடை நீக்கமா?
அமெரிக்காவில் டிக் டொக் செயலியை மீண்டும் செயற்படுத்தும் ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிடம் டிரம்ப் தொலைபேசியில் உரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் டிக் டொக் செயலியின் பெரும்பாலான கட்டுப்பாட்டை அமெரிக்கா கையகப்படுத்த தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி டிக் டொக் செயலிக்கு ஜோ பைடன் அரசாங்கம் தடை விதித்ததுடன், அமெரிக்க பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது
