
அமெரிக்காவிற்குள் நுழைவதற்குத் தடை
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்படலாம் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அபாயங்கள் காரணமாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இரு நாடுகளுக்கும் பயணத் தடை விதிக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடை அடுத்த வாரம் அமுலுக்கு வரக்கூடும் என ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த 2 நாடுகளைத் தவிர, பட்டியலில் வேறு நாடுகளும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.