அமெரிக்காவின் 28 பிராந்தியங்களுக்கு சூறாவளி எச்சரிக்கை!

புளோரிடா பிராந்தியத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தவுள்ள சூறாவளி காரணமாக அமெரிக்காவின் 28 பிராந்தியங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திடீர் அவசரநிலைமையை அடுத்து அந்தப் பிராந்தியங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பல வருடங்களின் பின்னர், இவ்வாறான நிலைமைக்குக் குறித்த பிராந்திய மக்கள் முகங்கொடுத்துள்ளதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்படவுள்ள திடீர் அனர்த்த நிலைமைகள் தொடர்பில் அந்த மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.