அமெரிக்காவின் ஹுஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்படும்!
அமெரிக்காவின் ஹுஸ்டன் பல்கலைக்கழகத்தில், மத்திய அரசின் நிதியுதவியுடன் தமிழ் இருக்கை அமைக்கப்படும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி வொஷிங்டனில் இந்திய வம்சாவளியினர் முன்னிலையில் உரையாற்றிய போது இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
இதேவேளை, உலகின் 3 ஆவது பெரிய பொருளாதார நாடாக, இந்தியா மாறும் என அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில், இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர், அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தக உறவு வலுவடைந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்