
அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு: ஊரடங்கு சட்டம் அமுல்
அமெரிக்காவில் ரிச்மண்ட் பகுதியில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 4 பேர் காயமடைந்துள்ள நிலையில், அந்தப் பகுதியில் ஊரடங்கு சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் 2 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் என 4 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் 2 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸாரினால் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
