அமரகீர்த்தி அத்துகோரல கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது

நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்களில் ஒருவரான 29 வயதான பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்களால் காலி முகத்திடல் போராட்ட களத்தில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

அதனையடுத்து, நிட்டம்புவ பிரதேசத்தில் பதற்றம் ஏற்பட்டிருந்தது.

இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

நிட்டம்புவ நகரில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதியிலிருந்து சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் ஆகியோர் சடலங்களாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது