அப்புத்தளையில் சிலம்ப கலையை ஊக்குவிப்பதற்கான செயற்திட்டம் முன்னெடுப்பு

அப்புத்தளை தமிழ் மத்திய கல்லூரி மற்றும் எல்ல சிலம்பாட்ட சங்கம் இணைந்து மலையகப் பெருந்தோட்ட பகுதியில் உள்ள பாடசாலைகளில் சிலம்பாட்டத்தை ஊக்குவிப்பதற்கான ஆரம்ப கட்ட நிகழ்வு அப்புத்தளை நகர பொது மைதானத்தில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வு அப்புத்தலை தமிழ் மத்திய கல்லூரியின் அதிபர் என். சந்திரமோகன் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றதோடு வேல் சேம்பியன் போட்டிகளில் இந்தியா சென்று இரண்டாம் மூன்றாம் இடங்களை பெற்ற ஜெபமாலை மரியான் மற்றும் நிலுக்ஷன் ஆகிய இருவரும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது முதல் முறையாக அப்புத்தளை பிரதேசத்தில் உள்ள மாணவர்களுக்கான விசேட சிலம்பம் மற்றும் தற்காப்பு பயிற்சி முகாம் நடத்தப்பட்டு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.

மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பித்து வைக்கப்பட்ட குறித்த நிகழ்வில் பாடசாலை அதிபர் என் சந்திரமோகன் அப்புத்தளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் பாடசாலை உப அதிபர் பிரதி அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்களும் கலந்து கொண்டதோடு எல்ல சிலம்பாட்ட சங்கத்தின் தலைவரும் கலந்து சிறப்பித்தனர்.

அப்புத்தளையில் சிலம்ப கலையை ஊக்குவிப்பதற்கான செயற்திட்டம் முன்னெடுப்பு

அப்புத்தளையில் சிலம்ப கலையை ஊக்குவிப்பதற்கான செயற்திட்டம் முன்னெடுப்பு

அப்புத்தளையில் சிலம்ப கலையை ஊக்குவிப்பதற்கான செயற்திட்டம் முன்னெடுப்பு

அப்புத்தளையில் சிலம்ப கலையை ஊக்குவிப்பதற்கான செயற்திட்டம் முன்னெடுப்பு

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்