அப்பியாச கொப்பிகளின் விலை அதிகரிப்பு

அப்பியாச புத்தகங்களின் விலை அதிகரித்துள்ளது.

அதன்படி, 40 பக்கங்களைக் கொண்ட அப்பியாசப் புத்தகம் ஒன்றின் விலை, 180 ரூபாயாக அதிகரித்துள்ளது.

120 பக்க அப்பியாசப் புத்தகம் ஒன்றின் விலை, 120 ரூபாயில் இருந்து 225 ஆக அதிகரித்துள்ளது.

80 பக்க அப்பியாசப் புத்தகம் 75 ரூபாயில் இருந்து 100 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

இதேவேளை 40 பக்க சீ.ஆர் புத்தகத்தின் புதிய விலை 150 ரூபாயில் இருந்து 290 ரூபாயாகவும் 40 பக்கங்கள் கொண்ட வரைபு புத்தகம் 230 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.