அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் ஜனனதினம் அனுஷ்டிப்பு

-யாழ் நிருபர்-

இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும்,தமிழர் விடுதலைக்கூட்டணியின் முன்னாள் செயலாளர் நாயகமும் முதலாவது தமிழ் எதிர்க்கட்சித் தலைவருமான அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 97 ஆவது ஜனனதினம் இன்று யாழ்.தொல்புரத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

பண்ணாகம் கிராம அபிவிருத்திச்சங்கத்தின் ஏற்பாட்டில் நடந்த நிகழ்வில் வலிகாமம் மேற்கு பிரதேச சபை முன்றலில் அமைந்துள்ள அன்னாரின் உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்தும், மலர்தூவியும் நினைவுகூரப்பட்டது.நிகழ்வில் ஏற்பாட்டாளர்களால் கேக் வெட்டிப்பட்டது.

நிகழ்வில் பண்ணாகம் கிராம அபிவிருத்தி சங்கத்தினார்பொது மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்