அன்னதானம் கொடுப்பதற்காக சென்றவர்களுக்கு நேர்ந்த கதி

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் மதுரங்குளி, கரிக்கட்டைப் பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

மதுரங்குளி கரிக்கட்டை பகுதியைச் சேர்ந்த ரொமேசா நிலந்தி (வயது – 49) என்பவரே இதன் போது உயிர் இழந்துள்ளார்.

அன்னதானம் கொடுப்பதற்காக மதுரங்குளி பகுதியிலிருந்து மோட்டார் சைக்களில் பயணித்தவர்கள் மீது, சிலாபத்திலிருந்து பாலாவி நோக்கி மீன்களை ஏற்றிச் சென்ற லொறி மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பின்பக்கமாக இருந்து பயணித்த பெண் உயிரிழந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை மதுரங்குளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்