அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும்?
கட்டுநாயக்க விமான நிலையம் உட்பட அனைத்து விமான நிலையங்களும் இம்மாதம் 31ஆம் திகதிக்கு பின்னர் மூடப்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
எரிபொருள் பற்றாக்குறையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இம்மாதம் 31ஆம் திகதி வரை மட்டுமே விமானங்களுக்கு தேவையான எரிபொருள் இருப்பதாக விமான நிலைய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும் இத்தகவலை அதிகாரிகள் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
