அனைத்து ரயில் நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு

நாடளாவிய ரீதியாக உள்ள ரயில் நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பை வழங்குமாறு பொலிஸ் மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

தற்போது கொழும்பு கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களில் பொது மக்களின் பாதுகாப்பிற்காக இராணுவத்தினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் தற்போது 32 ரயில் நிலையங்களில் இராணுவத்தினர் பொது மக்களின் பாதுகாப்புக்காக கடமையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தேவை ஏற்படுமாயின் ஏனைய ரயில் நிலையங்களிலும் பொலிஸாரின் பாதுகாப்புக்கு மேலதிகமாக இராணுவத்தினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்துள்ளார்.