அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தம்

நாட்டில் திடீரென ஏற்பட்டுள்ள அசம்பாவிதத்தினால் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன ரயில்வே கட்டுப்பாட்டுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதுவரையில் சேவையில் ஈடுபடும் ரயில்கள் அந்தந்த பிரதேசங்கள் வரை மட்டுமே இயங்கும் என்றும் இலங்கை ரயில்வே பொது முகாமையாளர் அறிவித்துள்ளார்.