அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும்!

நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைக்கப்பட்ட அனுமதிப் பத்திரம் கொண்டவற்றைத் தவிர, அனைத்து மதுபானசாலைகளையும் மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக மதுபானசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க