அனைத்து அரச பல்கலைக்கழக ஊழியர்களும் இன்று பகிஷ்கரிப்பு

இலங்கையில் உள்ள அனைத்து அரச பல்கலைக்கழக ஊழியர்கள்
இன்று செவ்வாய் கிழமை நண்பகல் தொடக்கம் நாளை புதன்கிழமை வரை ஒன்ரறை நாள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

2016ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை, பல்கலைக்கழக ஊழியர்களுக்கு அதிகரிப்பு செய்யப்படாது புறக்கணிக்கப்பட்டுவரும் 15 வீத சம்பள அதிகரிப்பை வழங்குமாறு வலியுறுத்தும் முக்கிய கோரிக்கை உட்பட பல்வேறு விடயங்களை முன்வைத்தே இப் பணி பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகிறது.

இத்தொழிற்சங்க நடவடிக்கையின் ஒரு அங்கமாக நாளை நாடளாவிய ரீதியில் உள்ள பல்கலைக்கழகங்களின் முன்பாக கவயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவுள்ளதுடன், ஊடகங்களை தெளிவூட்டும் செயற்பாடுகளும் இடம்பெறவுள்ளது.