அனைத்து அமெரிக்க தூதரகங்களின் சேவைகள் தொடர்பில் அறிவித்தல்

மெரிக்க அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடு முடங்கியுள்ள போதிலும் அமெரிக்காவிலும் வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்களிலும் திட்டமிடப்பட்ட கடவுச்சீட்டு (Passport) மற்றும் விசா (Visa) சேவைகள் நிலைமை சீராகும் வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் தமது எக்ஸ் தளத்தில் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

அத்துடன், நிலைமை சீராகும் வரையில் அவசர பாதுகாப்பு மற்றும் அச்சுறுத்தல் தகவல்கள்தவிர, தங்களது எக்ஸ் தளத்தில் வேறெந்த தகவல்களும் வெளியிடப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சேவைகள் மற்றும் செயல்பாட்டு நிலைமை குறித்த முழுமையான தகவல்களுக்கு, பொதுமக்கள் http://travel.state.gov என்ற இணையதளத்தைப் பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.