அனைத்துக் கட்சி அரசாங்கத்தை உருவாக்க ஜனாதிபதி இணக்கம்

அனைத்துக் கட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கான தமது இணக்கத்தை, அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரியப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளுக்கும் கடிதம் மூலம் ஜனாதிபதி இதனை அறியப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய பிரதமரும், அமைச்சரவையும் பதவி விலகியதன் பின்னர் அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைக்க நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்ற வகையில் தான் இணங்கியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.