அனுராதபுரம் பாதெனிய வீதியில் விபத்து
கல்கமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனுராதபுரம் – பாதெனிய வீதியில் திவுல்லேவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அனுராதபுரத்திலிருந்து பாதெனிய நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியை கடக்க முற்பட்ட பாதசாரி மீது மோதியதில் அந்த விபத்து நேர்ந்துள்ளது.
இதன்போது விபத்தில் காயமடைந்த பாதசாரி கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கட்டுகஸ்தோட்டை – கொண்டதெனிய பகுதியை சேர்ந்த 77 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பிரேத பரிசோதனைகளுக்காக, சடலம் குருநாகல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
