அனுராதபுரத்தில் காட்டு யானை தாக்கியதில் பெண் உயிரிழப்பு – வீடியோ இணைப்பு

அனுராதபுரம், திரப்பனேயில் காட்டு யானை தாக்கியதில் ஒரு பெண் உயிரிழந்துள்ளார், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

சிசிடிவி காட்சிகளில், பொது மக்கள் யானைகளை விரட்ட முயன்றதையடுத்து, இரண்டு யானைகள் இவர்கள் மீது தாக்கியுள்ளமை தெரியவருகின்றது.

கடந்த ஜூலை 25 ஆம் தேதி, யானைகள் காட்டில் இருந்து வழிதவறி மஹாவெவாவுக்கு அருகிலுள்ள ஒரு நீர்த்தேக்கத்தின் அருகே இருந்ததாகக் தெரியவருகின்றது.

குடியிருப்பாளர்கள் குழு ஒன்று அவற்றை மீண்டும் காட்டுக்குள் விரட்ட முயன்றபோது, யானைகளில் ஒன்று 24 வயதுடைய ஒரு பெண்ணைக் தாக்கி காயப்படுத்திய நிலையில் உயிரிழந்துள்ளார் மற்றும் ஒருவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

வனவிலங்கு பாதுகாப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், இந்த சம்பவம் வனவிலங்கு அதிகாரிகளின் உதவியின்றி நடந்துள்ளதாகவும், சிசிடிவி காட்சிகளில், துறையுடன் தொடர்பில்லாத ஒருவர் யானைகளை விரட்டும் முயற்சியின் போது அவற்றில் ஒன்று மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதைக் காட்டுகிறது.

துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.