அனுரகுமார திஸாநாயக்க ஐந்து மாவட்டங்களில் முன்னிலையில்

தபால் மூல வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க ஐந்து மாவட்டங்களில் முன்னிலையில் உள்ளார்.

அதன்படி இரத்தினபுரி மாவட்டத்தில் 19,185 வாக்குகளையும், பொலன்னறுவை மாவட்டத்தில் 11,768 வாக்குகளையும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 14,482 வாக்குகளையும் மொனராகலை மாவட்டத்தில் 14,050 வாக்குகளையும், காலி மாவட்டத்தில் 25,892 வாக்குகளையும் திஸாநாயக்க பெற்றுள்ளார்.