அனுமதி பெறாமல் மீன் பிடிக்கச் சென்ற இரு மீனவர்கள் பலி

-மன்னார் நிருபர்-

தமிழ்நாடு-ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் மேற்கு வாடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை முறையான அனுமதி சீட்டு எதுவும் பெறாமல் மீன் பிடித்துக் கொண்டிருந்த இரண்டு மீனவர்கள் கடலில் வீழ்ந்து உயிரிழந்துள்ளனர்.

ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் மேற்கு வாடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை மீன்பிடி தொடக்கலாம் முடிவதற்கு முன்பாகவே முறையான அனுமதி சீட்டு எதுவும் பெறாமல் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் சுதர்சன் என்பவருக்கு சொந்தமான ஒரு விசைப்படகில் ஐந்து மீனவர்கள் சென்ற நிலையில் படகின் இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக படகு சேதம் அடைந்ததை அடுத்து அதில் இருந்த இரண்டு நபர்கள் அருகில் இருந்த படகு மூலம் மீட்கப்பட்டு கரை சேர்ந்தனர்.

இந்த நிலையில் ஆரோக்கியம், பரகத்துல்லா என்ற இரண்டு மீனவர்கள் மட்டும் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்

இதையடுத்து இந்திய கடலோர காவல்படை, கடலோர காவல் குழும போலிஸார் இணைந்து உயிரிழந்த இரண்டு மீனவர்களின் உடல்களை இன்று சனிக்கிழமை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற முதல் நாளே இரண்டு மீனவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சக மீனவர்கள் மற்றும் உயிரிழந்த மீனவரின் குடும்பத்தினரை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்