அனுமதிப்பத்திரம் இன்றி மணல் அகழ்வில் ஈடுபட்ட ஐந்து டிப்பர்கள் பறிமுதல்!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குடமுருட்டி ஆற்று பகுதியில், சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 5 சந்தேக நபர்கள் பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து 5 டிப்பர்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குடமுருட்டி ஆற்று பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம் பெறுவதாக, கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பின் போது, வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்வதற்காக, அனுமதிப்பத்திரம் இன்றி மணல் அகழ்வில் ஈடுபட்ட ஐந்து டிப்பர்களின் சாரதிகள் கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், பொலிஸ் விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்