அனுமதிப்பத்திரம் இன்றி மணல் கடத்தியவர் கைது
– யாழ் நிருபர்-
யாழ்ப்பாணத்தில் இன்று செவ்வாய்க்கிழமை அனுமதிப்பத்திரம் இன்றி மணல் கடத்திய சாரதி டிப்பருடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதடி பகுதியில் வைத்து 45 வயதுடைய சந்தேக நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
சந்தேகநபரை தற்போது சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், விசாரணைகளின் பின்னர் நாளை புதன்கிழமை அவரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
