அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்காத வாகனங்கள்: கறுப்புப்பட்டியலில்

5 வருடங்களாக வருமான அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்காத வாகனங்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்கவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த விசேட அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான வாகனங்களை தகவல் அமைப்பிலிருந்து நீக்குவதற்கும் தீர்மானித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் தற்போது 83 இலட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனினும், 60 இலட்சம் வாகனங்கள் மட்டுமே QR குறியீட்டு முறைமை மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

5 வருடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக வருமானவரி அனுமதிப்பத்திரம் பெறாத வாகனங்கள், மாவட்ட மோட்டார் வாகன பரிசோதகரின் உதவியுடன் தகவல் அமைப்பில் இருந்து நீக்கப்படும் என அவ் அறிக்கையில் சுட்டிக்காட்டப்படுகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்