அனிருத் இல்லாமல் திரைப்படம் எடுக்க மாட்டேன் – லோகேஷ்

இயக்குனராக பல வெற்றி திரைப்படங்களை வழங்கியுள்ள லோகேஷ் கனகராஜ் நடிகராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.

அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் லோகேஷ் தற்போது ஹீரோவாக ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்தநிலையில் நான் அனிருத் இல்லாமல் படம் எடுக்க மாட்டேன் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற செவ்வியொன்றின் போது அவர் இதனை குறிப்பிட்டார்.

இதனால் லோகேஷின் அடுத்தடுத்த திரைப்படங்களுக்கும் அனிருத் தான் இசைமைப்பாளர் என்பது உறுதியாகியுள்ளது.