அனர்த்த நிவாரண நிதி விநியோக வழிகாட்டல்கள் வௌியீடு
அனர்த்தங்களின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்கப்படும் நிவாரண நிதிகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது தொடர்பான புதிய வழிகாட்டல்களைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ளார்.
இந்த வழிகாட்டல்கள் நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு மற்றும் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு ஆகியவற்றிலிருந்து வழிகாட்டல்களுக்கு அனுமதி கிடைத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நிவாரணம் வழங்குவதில் ஈடுபட்டுள்ள தொடர்புடைய நிறுவனங்களின் பொறுப்புகளை இந்த வழிகாட்டல்கள் குறிப்பிடுவதுடன், பயனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய கொடுப்பனவுகள் மற்றும் உதவிகளையும் விரிவாக சுட்டிக்காட்டியுள்ளன.
