
அனர்த்தத்தால் பாரிய வணிகங்கள் பாதிப்பு – விபரங்களை அறிவிக்க தொலைபேசி இலக்கம் அறிவிப்பு
அதிதீவிர வானிலை காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள 13,698 வணிக செயற்பாடுகள் குறித்த தரவுகள் கைத்தொழில் பேரிடர் ஆதரவு மையத்திற்கு இதுவரை கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 5,639 நுண் அளவிலான வணிகங்களும், 4,636 சிறு அளவிலான வணிகங்களும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.
அத்துடன், 2,986 நடுத்தர அளவிலான வணிகங்களும், 437 பாரிய அளவிலான அளவிலான வணிகங்களும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, பாதிப்புக்குள்ளாகியுள்ள வணிகங்கள் தொடர்பில், 0712 66 66 60 எனும் தொலைபேசி இலக்கம் ஊடாக தொடர்புகொண்டு அறிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
