அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியூசிலாந்து மனிதாபிமான நிவாரணம்

நியூசிலாந்து அரசாங்கம், அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர மனிதாபிமான நிவாரணத்தை வழங்கும் வகையில், ஒரு மில்லியன் நியூசிலாந்து டொலர்களை (NZ$ 1 Million) வழங்கியுள்ளது.

இலங்கையில் உள்ள நியூசிலாந்து உயர்ஸ்தானிகராலயம், அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளது.