அநுராதபுரம் – கெக்கிராவ வீதியில் விபத்து: தாயும் மகனும் காயம்

அநுராதபுரம் – கெக்கிராவ வீதியில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்தில் தாயும் மகனும் காயமடைந்துள்ளனர்.

தனியார் பஸ் ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தின் போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயும் மகனும் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்