
அநுராதபுரத்தில் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது
அநுராதபுரம் பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சந்தேக நபர் அநுராதபுரம் பிள்ளையார் சந்தி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அநுராதபுரம் , மிஹிந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
