அநாதரவாக நிறுத்தப்பட்ருந்த நான்கு கோடி ரூபாய்க்கும் மேல் பெறுமானம் கொண்ட வாகனம் மீட்பு

அநாதரவாக நான்கு கோடி ரூபாய்க்கும் மேல் பெறுமானம் கொண்ட வாகனம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பதுளை பிராந்திய குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.

பதுளை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய பசறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மில்லபெத்த பகுதியில் அமைந்துள்ள சம்மார் பார்க் தனியார் மின்சார உற்பத்தி நிலைய வளாகத்தில் இருந்து டொயோட்டா லேன் குசர் ப்ராடோ ரிஎக்ஸ் (TOYOTA LANE KUSER PRADO TX) ரக வாகனமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள வாகன தகடும் வாகன பதிவு இலக்கமும் மாறுபட்டு காணப்படுவதாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த வாகனம் யாருடையது? அல்லது ஏதேனும் குற்றசெயல்களுடன் தொடர்புடைய வாகனமா? என பல கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை பதுளை தலைமையக குற்றப்புலனாய்வு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்