அத்து மீறி வீட்டினுள் புகுந்து கூரிய ஆயுதத்தால் தாக்குதல்

பாணந்துறையிலுள்ள வீடொன்றில் ஒருவர் அத்துமீறி நுழைந்து கத்தியால் தாக்கியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் படுகாயமடைந்து பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதே பகுதியை சேர்ந்த தந்தை, தாய், மகள் ஆகியோரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து சந்தேகநபர் பொலிஸில் சரணடைந்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.