அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 8 இந்திய மீனவர்கள் கைது

மன்னார் அருகே இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 8 இந்திய மீனவர்கள் நேற்று திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் பயணித்த படகு ஒன்றும் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைதானவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்றொழில் திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்