அத்துமீறி இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்த 12 இந்திய மீனவர்கள் கைது

-யாழ் நிருபர்-

அத்துமீறி சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்பிற்குள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த, 12 இந்திய மீனவர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை கடற்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில், பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து குறித்த மீனவர்களும், அவர்கள் பயணித்த படகு ஒன்றுடன் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து வரப்பட்டு, அவர்களிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.