
அத்துமீறிய 23 மீனவர்கள் கைது
யாழ்ப்பாணம் – நெடுந்தீவை அண்மித்த கடற்பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 23 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, சந்தேக நபர்கள் பயன்படுத்திய 3 கடற்றொழில் படகுகள் கைப்பற்றப்பட்டதாகக் கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் காங்கேசன்துறை கடற்றொழில் துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக மயிலிட்டி கடற்றொழில் பரிசோதகர் காரியாலயத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
