
அத்தியாவசிய ஔடதங்களை தடையின்றி இறக்குமதி செய்ய முடியும்!
அத்தியாவசிய ஔடதங்களை தடையின்றி இறக்குமதி செய்வதற்கு நிதி அமைச்சு பூரண ஆதரவை வழங்கும் என நிதி அமைச்சில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், சுகாதார அமைச்சின் செலவுகளை ஈடுசெய்வது தொடர்பான, விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக பதில் நிதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
