அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு

லங்கா சதொச ஊடாக இன்று வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மூன்று அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு கிலோகிராம் வெள்ளை அரிசி 10 ரூபாவால் குறைக்கப்பட்டு 165 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் வெள்ளை நாட்டு அரிசி 07 ரூபாவால் குறைக்கப்பட்டு 168 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் சிவப்பு அரிசி 02 ரூபாவால் குறைக்கப்பட்டு 137 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.