மத்திய அதிவேக நெடுஞ்சாலையில், இன்று திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில், ஒருவர் உயிரிழந்ததாகவும், இருவர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குருநாகல் சந்திப்புப் பகுதியிலிருந்து, மத்திய அதிவேக நெடுஞ்சாலைக்குள் நுழைந்த கார், முன்னால் பயணித்த லொறியின் பின்புறத்தில் மோதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று அதிகாலை 04.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில், காரின் பின் இருக்கையில் இருந்து பயணித்தவர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் குருநாகல் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.




