அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து இருவர் பலி
கொழும்பு – தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் சிக்கி, 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
மத்தலவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற வானின்; டயர் வெடித்ததில், கட்டுப்பாட்டை இழந்த விபத்துக்குள்ளானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தின் போது சிற்றூர்தியில் 6 பேர் பயணித்துள்ளனர். குறித்த விபத்தின் போது சிற்றூர்தியில் 6 பேர் பயணித்துள்ளனர்.
அதில் இருவர் பலியானதுடன், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், குறித்த விபத்து தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.