
அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து: போக்குவரத்து தடை
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதால் வாகன சாரதிகள் மாற்று வழியை உபயோகிக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 118 கிலோமீற்றர் கொடகம இன்டர்சேஞ்ச் மற்றும் கொக்மதாவ இடைப்பாதைக்கு இடையில் லொறியொன்று கவிழ்ந்துள்ளதாலேயே குறித்த போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மத்தலயிலிருந்து கொழும்பு நோக்கி வரும் வாகனங்கள் கொடகம இடைப்பாதையிலிருந்து புறப்பட்டு தெற்கு அதிவேக வீதியில் கொக்மத்வ சந்திப்பில் மீண்டும் நுழைந்து கொழும்பு நோக்கி பயணிக்க முடியும் தெற்கு அதிவேக வீதி போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
