
அதிவேக நெடுஞ்சாலைகளில் புதிய விதிமுறைகள்
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு புதிய விதிமுறைகளை விரைவில் அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன இன்று தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று செவ்வாய் கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் அதனை தெரிவித்தார்.
மேலும் புதிய விதிகள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பு அடுத்த இரண்டு வாரங்களில் வெளியிட எதிர்பார்த்திருப்பதாகவும் விசேட நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டு அவர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் வர்த்தமானி வெளியிடப்படும் என அவர் தெரிவித்தார்.
