அதிவேக நெடுஞ்சாலைகளின் கட்டணமும் அதிகரிப்பு

எரிபொருளின் விலை அதிகரிப்பை அடுத்து நெடுஞ்சாலைகளில் இயங்கும் சொகுசு பஸ்களின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) இன்று அறிவித்துள்ளது.

சொகுசு நெடுஞ்சாலை பேருந்துகளின் கட்டணம் 19.49% அதிகரித்துள்ளது என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த விலை உயர்வு இன்று பிற்பகல் 01.00 மணி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

கொழும்பு – மாத்தறை: ரூ. 1,210, கடவத்தை – காலி : ரூ. 1,000, கொழும்பு – எம்பிலிப்பிட்டிய: ரூ. 1,680, கொழும்பு – வீரகெட்டிய : ரூ. 1,550, கொழும்பு – மொனராகலை : ரூ. 2, 420, மகும்புர – அக்கரைப்பற்று : ரூ. 3,100 என்றவாறு அதிகரிக்கப்பட்டுள்ளது