
அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் மூன்று ராசிகள்
ஜோதிட சாஸ்திரங்களின்படி, ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய ராசிகளை மாற்றுகின்றன. இந்த மாற்றங்களால் சில ராசியினருக்கு பல நல்ல பலன்களும் சில ராசியினருக்கு பல கெட்ட பலன்களும் அவர்களுடைய வாழ்வில் நடைபெறுகின்றன. இந்நிலையில் சூரிய பகவான் கன்னி ராசிக்குள் பிரவேசிக்க இருக்கிறார். ஏற்கனவே கன்னி ராசிக்குள் கேது இருக்கும் நிலையில் சூரியனும் நுழைகிறார். 18 ஆண்டுகளுக்கு பிறகு சூரியன், கேது சேர்க்கை நடைபெறவுள்ளது. இது சில ராசியினருக்கு அதிக அளவிலான நன்மையினை அளிக்கவுள்ளது.
செப்டம்பர் 16ம் திகதி இரவு 8 மணிக்கு சூரியன் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்குள் நுழைவார் என பிரபல ஜோதிடர் சந்திர பிரகாஷ் தந்தன் தெரிவித்துள்ளார். அதன் பிறகு, அக்டோபர் 17 ஆம் திகதி காலை 8 மணியளவில் சூரியன் தனது ராசியை மாற்றும் எனவும் அதாவது சூரியன் மற்றும் கேதுவின் சேர்க்கை ஒரு மாதம் முழுவதும் நீடிக்கும் அவர் கூறுகிறார். இது மூன்று ராசிக்காரர்களுக்கு நல்ல பலனைத் தருவதாக அவர் கூறியுள்ளார். அந்த ராசியினரை குறித்து இப்போது தெரிந்துகொள்ளலாம்.
மகரம்
இந்த ராசியின், ஒன்பதாம் வீட்டில் சூரியன் மற்றும் கேதுவின் சேர்க்கை இருக்கும். இந்த இணைவானது அவர்களுடைய வாழ்வில் அதிக அளவிலான அதிர்ஷ்டத்தை அள்ளி தரப்போகிறது. குடும்பத்துடன் எந்தப் புகழ்பெற்ற கோயிலுக்கும் செல்லலாம். அதிர்ஷ்ட பலம் இருப்பதால் எந்த துறையிலும் வெற்றி பெற முடியும். நீண்டநாள் கிடைக்காமல் இருந்த பணம் விரைவில் திரும்ப கிடைக்கும். ஆன்மிகத்தின் மீதான நாட்டமும் அதிகரிக்கும். இதனால் சமூகத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும்.
விருச்சிகம்
சூரியன் இந்த ராசியின் பதினொன்றாம் வீட்டில் நுழைகிறார். இதன் காரணமாக இந்த ராசியில் சூரியன் மற்றும் கேதுவின் சேர்க்கை ஏற்படுகிறது. இதன் விளைவாக, அவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் ஏற்படும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் முடிவடையும். மனம் ஆன்மீகத்தில் அதிகம் நாட்டம் காட்டும். பணியிடத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும். உங்கள் உடன்பிறந்தவர்களுடன் தரமான நேரத்தை செலவிடுங்கள். உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நீண்ட நாட்களாக இருந்த கடனில் இருந்து விடுபடலாம்.
துலாம்
இந்த ராசியில் சூரியன் பன்னிரண்டாம் வீட்டில் நுழைகிறார் . இதன் மூலம் இந்த ராசிக்காரர்களுக்கு சூரிய பகவானின் அருள் கிடைக்கும். உங்கள் மனைவியுடன் தரமான நேரத்தை செலவிடுங்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சமூகத்தில் மரியாதை கூடும். உங்கள் நிதி நிலை நன்றாக மாறும். பணம் சம்பாதிக்க புதிய வாய்ப்புகள் உருவாகும். இந்த சூழ்நிலையில், நீங்கள் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்வதில் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். நீங்கள் உங்கள் இலக்குகளை எளிதில் அடையலாம் மற்றும் உங்கள் கனவுகளை நீங்கள் நிறைவேற்ற சரியான நேரம்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
