
அதிரடியாக குறைந்த மின் கட்டணம்
மின்சாரக் கட்டணங்கள் இன்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 21.9வீதம் குறைக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபையினால் அண்மையில் முன்வைக்கப்பட்ட மின்சாரக் கட்டணக் குறைப்புப் பிரேரணை தொடர்பான தீர்மானத்தை வழங்குவதற்காக கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அதன் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ இதனைத் தெரிவித்தார்.
