
அதிரடியாக குறைந்த கோழியிறைச்சியின் விலை
ஒரு கிலோ கோழியிறைச்சியின் விலை 200 ரூபாவால் குறைக்கப்பட்டு 1450 ருபாவிற்கு தற்போது விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை கோழியிறைச்சி வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர அறிவித்துள்ளார்.
விலங்குத் தீவனங்களின் விலைகள் குறைவடைந்துள்ளமையால் கோழியிறைச்சியின் விலையும் குறைக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
