அதிரடியாக உயர்ந்த தங்கவிலை

இலங்கையில் இன்று சனிக்கிழமை தங்கத்தின் விலை 5000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

சர்வதேச மற்றும் உள்ளூர் சந்தை நிலவரங்களுக்கு அமைவாகவே இந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 395,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 365,400 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,375 ரூபாயாகவும்,

22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,675 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.